ரஷ்யாவின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் 529 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.