ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை இன்று (27) கூடவுள்ளது.
இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவிக்கையில்;
“.. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையானது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு கூடவுள்ளது. வழமையாக நிறைவேற்று சபையானது அரசியலமைப்பு ரீதியாக அவசியமான சில சூழ்நிலைகளில் கூடும். அதன்படி இது வழமையான கூட்டமாகும். தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து பல விவாதங்கள் நடைபெற உள்ளன..”