சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (05) பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.
இதன்படி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.