ராஜகிரியில் உள்ள மதுவரி திணைக்களத்தின் தலைமையகம் முன்பு பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் 700 கோடி ரூபாய் வரியை மதுவரி திணைக்களம் வசூலிக்காததை கண்டித்து இன்று 20ஆம் திகதி காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.