Our Feeds


Monday, March 18, 2024

SHAHNI RAMEES

அல் - ஷிபா வைத்தியசாலை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்...!

 



காஸாவின் அல்-ஷிபா வைத்தியசாலைமீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.



ஹமாஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளர்கள் வைத்தியசாலையில் பதுங்கியிருந்து சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதுடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மருத்துவ வசதிகளை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் எச்சரித்துள்ளது.



இஸ்ரேல் தாக்குதலில், அல்-ஷிபா வைத்தியசாலையிலுள்ள அறுவை சிகிச்சை பிரிவில் தீ பரவியுள்ளதுடன், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இந்தநிலையில், இது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறும் செயல் என காஸா கண்டனம் தெரிவித்துள்ளது 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »