சவூதி அரேபிய இராச்சியத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இன்று (11) புத்தசாசன அமைச்சில் இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களுக்கு கையளிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
நாட்டில் 2500 பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்கள் இருப்பதால்
ஒரு பள்ளிவாசலுக்கு இருபது கிலோ பேரீச்சம்பழம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் செய்துள்ளது.