Our Feeds


Wednesday, March 6, 2024

News Editor

அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற சேவை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தம்


 அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு சபாநாயகரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

 

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டது.

 

இது தொடர்பில் சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில்,

 

2023 ஆம் ஆண்டு அலி ஷப்ரி ரஹீம் உங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக 70 மில்லியனுக்கும் அதிக தங்கம் மற்றும் தொலைப்பேசிகளை கொண்டுவந்தமையை நீங்கள் ஏற்றுக் கொண்டதாலும், அந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு இலங்கை சுங்கத்தினால் உங்களுக்கு 75 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு, அவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.

 

இந்த செயற்பாடு காரணமாகவும் மக்களுக்காக சேவையாற்றும் ஒருவர் மக்களின் பணத்தை தவறான விதத்தில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டமைக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுகிறது என்றார்.

 

இந்நிலையில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »