ரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள பிரபலமான இசை நிகழ்வில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது, இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த செய்தி நிறுவனமான அமாக் வெள்ளிக்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
தாக்குதல் நடந்த இடமான குரோகஸ் சிட்டிஇசை கச்சேரி அரங்கில் "தானியங்கி ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" மற்றும் "ஒரு கையெறி குண்டு அல்லது தீக்குண்டான வெடிகுண்டை வீசினர் .பின்னர் அவர்கள் "ஒரு வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது" என்று செய்தி நிறுவனம் கூறியது.
ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் புட்டின் தெரிவு செய்யப்பட்ட சில நாட்களில் அதுவும் ரஷ்ய புலனாய்வுப் பிரிவை மீறி இவ்வகையான தாக்குதல் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.