சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸுஊத் நன்கொடையான 50 தொன் பேரீச்சம்பழங்களை, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு கையளித்தது.
இலங்கை மக்களுக்காக சவூதி அரேபிய இராச்சியம் வழங்கிய அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும், குறிப்பாக புனித ரமழான் மாதத்தில் அதன் மூலம் பயனடைவதற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் விரைவாகத் தொடர்பு கொள்ளுமாறு இந்த பரிசின் மூலம் பயனடையும் தரப்பினரை தூதுவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் .
இந் நன்கொடையானது இரு புனிதசத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் அவர்களால், பல சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டங்களின் கீழ், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மிகவும் தேவைப்படும் குடும்பங்களைச் சென்றடையும் நோக்கோடு,வழங்கப்பட்டதாகும்.