Our Feeds


Friday, March 1, 2024

News Editor

பங்களாதேஷில் பாரிய தீ விபத்து - 43 பேர் உயிரிழப்பு


 பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில உணவகங்கள், துணிக்கடைகள் செயல்பட்டு உள்ளன.


35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »