Our Feeds


Friday, March 8, 2024

ShortNews Admin

மத்ரஸா மாணவன் மர்ம மரணம் - 4 பேருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை



மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில்  சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான   4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில்  விடுவித்தது கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு நேற்று (6)    கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட  சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும்  மன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான   4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்ட  நீதவான், மற்றுமொரு சந்தேக நபரான மௌலவியை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


குறித்த சம்பவத்தில் கைதான    30,26, 22, 23, வயது மதிக்கத்தக்க  4 சந்தேக நபர்களை   பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும்   குறித்த வழக்கில்   பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்   விடயங்களை ஆராய்ந்த நீதவான்,    நீண்ட சமரப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  கைதான   4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை ,மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல்,  குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதித்தார்.


மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல்  நீடிக்கபட்டு   எதிர்வரும்  மார்ச் மாதம் 20  திகதி வரை வழக்கினை ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதவான்  உத்தரவிட்டார்.

 

அம்பாறை நிருபர் ஷிஹான்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »