புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு முப்பது வருட குத்தகை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் (Akira Hirose) தலைமையில் இடம்பெற்றது.
அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டை இந்த ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்த மிதக்கும் சந்தை வளாகம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவதானம் செலுத்திய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தற்போது நாட்டில் பொருளாதார பிரச்சினைகளுடன் இதனை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை அரச தனியார் பங்களிப்பின் கீழ் அபிவிருத்தி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இது ஜப்பானிய முதலீட்டாளருக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறிவைத்து புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகம் சுற்றுலா நகரமாக நிறுவுவதே இதன் நோக்கமாகும். அதன் அபிவிருத்தித் திட்ட காலம் 6 மாதங்கள் ஆகும்.