மின்சார கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்படும்
- 30 அலகுகளுக்கு குறைவான பிரிவில் பாவனையாளர்களுக்கு அலகுகளுக்கான கட்டணம் 33 வீதத்தால் குறைப்பு
- 31 மற்றும் 60 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 28 சதவீதத்தால் குறைந்துள்ளது
- 60 முதல் 90 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 30 சதவீதம் குறைகிறது
- 90 மற்றும் 180 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 24 சதவீதம் குறைந்துள்ளது
- 180 அலகுளுக்கு மேல் உள்ள வீட்டு மின் பாவனை பிரிவினருக்கு மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைப்பு
- வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீத குறைப்பு
- ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளின் மின் கட்டணம் 18 சதவீத குறைப்பு
- பொது நோக்கம் பிரிவில் 23 சதவீதம் குறைவு
- பொதுத்துறைக்கு 22 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்படும்.
- வீதி விளக்குகளுக்கு 20 சதவீதம் சலுகை