பாதுக்க நகரில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் தும்புத்தடியால் தாக்கப்பட்டதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரால் ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும், பாடசாலை நேரத்தில் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றதாக கூறி குறித்த மாணவர்களை வகுப்பு ஆசிரியர் தாக்கியதாக பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாதுக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்