ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்,எரிபொருள் ஏற்றிச்சென்ற வாகனத்துடன் மோதி விபத்துக்ககுள்ளானது. குறித்த விபத்தில் 21 உயிரிழந்ததுடன் 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 10 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.