கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றைய தினம் 20 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேலும் சில கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.