2024 ஆம் ஆண்டிற்கான சவுதி மன்னர் சல்மான்
பின் அப்துல் அஸீஸ் அவர்களின் உம்ராவிற்கான இலங்கை விருந்தாளிகள்சவுதி அரேபியா தொண்டு தொட்டு உலக முஸ்லிம்களின் நலவுகளில் பங்கு கொள்ளக்கூடிய ஒரு நாடு என்பது நியாயமாக சிந்திக்கும் அனைவரது பார்வைக்கும் மிக வெளிப்படையானதாகும். அந்த அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு உலக நாடுகளிலிருந்து பலரையும் உம்ராவுக்காக தனது விருந்தாளிகளாக சவுதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஃஊத் அவர்கள் சவுதிக்கு வரவழைத்து கண்ணியப்படுத்தினார்.
அந்த அடிப்படையில் இலங்கையிலிருந்தும் 10 பேர் தெரிவு செய்யப்பட்டு குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு கடந்த 06/03/2024 அன்று சவுதி பயணமானார்கள். ஆரம்பமாக மதீனாவிற்கு சென்று அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தரிசித்து, இன்னும் மஸ்ஜித் நபவியின் இமாம்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். பின்னர் மக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உம்ரா கடமையை நிறைவேற்றியுள்ளனர். பத்து நாட்களைக் கொண்ட குறித்த பயணம் 16/03/2024 சனிக்கிழமை இன்றுடன் முடிவடைகிறது.
இலங்கையிலிருந்து மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தாளியாளராக உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்காக சவுதி பயணமான அதிர்ஷ்டசாலிகளின் விபரம் பின்வருமாறு:
1-Proff Rameez Abubaker, Vice Chancellor, South Eastern University
2- Ash-Sheikh Naimudeen, Secretary, ministry of investment
3- Mr. Fayadh, Private secretary, minister of foreign affairs.
4- Mr. Marlin Marikkar, Associate editor, Lake House.
5- Mr. Fairoos, Vidivelli editor.
6- Ulfath Uwais coordinator secretary, Ministry of foreign affairs
7- Mr. M.R. Khalid Mishal, Student of Jamia Naleemia
8- Ash-Sheikh Ziyad Jamal, Principal Al-Khairath Ladies Arabic College, Eravur
9- Ash-Sheikh Raees Deen Salafi (Social worker)
10- Ash- sheikh MH Fouzul Alavi, Lecture, Al-Najeebath Institute for Girls.
இத்தெரிவைப் பார்க்கின்றபோது, அரச மற்றும் தனியார் துறைகளில் பொறுப்பான இடங்களிலுள்ள எமது சகோதரர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
கலாநிதி MHM Azhar (PhD)