பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட 20 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தில் இன்று 19 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்களை இம்மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தில் இன்று 19 ஆம் திகதி இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட 20 விசேட பொலிஸ் குழுக்கள் ஸ்தாப்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.