Our Feeds


Sunday, March 17, 2024

SHAHNI RAMEES

இலங்கையர்கள் உள்ளிட்ட 158 பேர் மலேசியாவில் கைது...!

 



மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த

இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு உரிய விசா இல்லை என்றும் கூறப்படுகிறது.


இந்த சுற்றிவளைப்பில் 83 ஆண்கள், 54 பெண்கள், 08 சிறுவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கைது செய்யப்பட்டதாக மலேசிய மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேசியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.


இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சிலர் மலேசியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


முறையான அனுமதியின்றி வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிடம் வழங்கியமை குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மலேசிய மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »