ஆபிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரின் கமனே பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது மணிக்கு சுமார் 150 கிலோ மீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியதில் அங்குள்ள 9 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் கமனே நகர் முழுவதும் வெள்ளதால் மூழ்கியது.
எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செற்தி வெளியிட்டுள்ளன.