வவுனியாவின் தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட
பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், குறித்த சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளுதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.