Our Feeds


Monday, March 25, 2024

SHAHNI RAMEES

நாட்டில் 12 வீதமான முதியோர்களுக்கு பற்கள் இல்லை....

 

இலங்கையில் 12 வீதமான முதியோர் பற்கள் அனைத்தையும் இழந்துள்ளதாகவும் எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். உலக வாய் சுகாதாரத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர், வாழ்நாள் முழுவதும் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம்

என்றார்.



மேலும், நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »