பாகிஸ்தானிலுள்ள நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.இது குறித்து அதிகாரிகள் நேற்று(20) கூறியதாவது:பலூசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டம், ஜர்டாலோ பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்தச் சுரங்கத்தில் 20 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். எட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் முடித்துக் கொள்ளப்பட்டதாக நேற்று(20) அறிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.