Our Feeds


Wednesday, March 6, 2024

News Editor

பேஸ்புக் செயலிழப்பு : $100 மில்லியன் இழப்பு


 ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால், சமூக வலைதளங்களுக்குச் சொந்தமான மார்க் ஸக்கர்பெர்க்கின் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் நேற்று திடீரென முடக்கப்பட்டன. பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்படுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.

சமூக ஊடக தளங்களான Facebook, Messenger மற்றும் Instagram ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து Meta பங்குகளும் 1.5 சதவீதம் சரிந்தன. ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில மணி நேரம் கழித்து, ‘மெட்டா’ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு, பிழையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »