2022 மே மாதம் 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் போராட்டக்காரர்களால் பல்வேறு வழிகளில் தீயிட்டு எரிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்காக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, இழப்பிடுகளுக்கான அலுவலகம் மற்றும் மதிப்பீட்டு திணைக்களத்திற்கு இன்று (27) பணிப்புரை வழங்கினார்.
தீயினால் அழிந்த 42 வீடுகளில் 33 வீடுகளுக்கு இழப்பிடுகளுக்கான அலுவலகத்தினால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் போராட்டக்காரர்களால் எரித்து அழித்த மற்றும் சேதப்படுத்திய அசையா மற்றும் அசையும் சொத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (27) கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தினால் கம்பஹா மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இழப்பீடு வழங்குவதில், அசையா மற்றும் அசையும் சொத்து என இரண்டு பகுதிகளாக மதிப்பீடு செய்யப்பட்டது. வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 162 ஆகும்.