குளியாப்பிட்டிய கிரிஉல்ல கல்வி வலயத்திற்கு
உட்பட்ட மதீனா சியபம்பளாகஸ்கொடுவ குளியாப்பிட்டிய கிரிஉல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட மதீனா சியபம்பளாகஸ்கொடுவ தேசிய பாடசாலையில் தகுதியும் திறனும் வாய்ந்த அதிபர் ஒருவர் இருக்க புதிதாக மற்றுமொரு அதிபர் ஒருவரை நியமனம் செய்தமைக்கு எதிராக பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் ஊர் மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். தீர்வு கிட்டும் வரை பெற்றோர்கள் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று மதீனா சியம்பளாகஸ்கொடுவ ஜும்ஆப் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகை முடிந்தவுடன் ஓன்று கூடிய ஆயிரக் கணக்கான மக்கள் மதீனா சியபம்பளாகஸ்கொடுவ தேசிய பாடசாலையில் புதிதாக நியமனம் செய்த அதிபரை இடை நிறுத்த வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஆரம்பமாகி பிரதான வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் அமைந்துள்ள குருவிக்கொடுவ சந்தி வரையிலும் சென்று மீளவும் பாடசாலை முன்னால் திரும்பி வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரார்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதீனா பொக்கிஷத்தைப் பாதுகாப்போம். புதிய அதிபர் எமக்கு வேண்டாம், ஹைதர் அலி அதிபர் திறமைமிக்கவர். அலி இருக்க எலி எதற்கு. வேண்டாம் வேண்டாம் புதிய அதிபர் வேண்டாம். பிள்ளைகளின் கல்வியில் விளையாடாதே. பொருத்தமற்ற தலைமைத்துவத்தின் கீழ் கற்க மாட்டோம். மதீனா பாடசாலையை கட்டியெழுப்ப ஹைதர் அலி எங்களுக்கு வேண்டும். கல்வித் திணைக்களமே எமக்கு ஆளுமைமிக்க அதிபரே வேண்டும்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரை இடைநிறுத்தக் கோரி பாடசாலை முன்னால் போராட்டத்தை தொடரேச்சியாக நடத்துவதற்கு இரு கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கிரிஉல்ல கல்வி வலயம், வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் கல்வி அமைச்சு போன்றவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வார்ப்பாட்டத்தின் போது சிறார்கள் தாய்மார்கள் பழைய மாணவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி தேசிய பாடசாலையில் தகுதியும் திறனும் வாய்ந்த அதிபர் ஒருவர் இருக்க புதிதாக மற்றுமொரு அதிபர் ஒருவரை நியமனம் செய்தமைக்கு எதிராக பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் ஊர் மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். தீர்வு கிட்டும் வரை பெற்றோர்கள் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மதீனா சியம்பளாகஸ்கொடுவ ஜும்ஆப் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகை முடிந்தவுடன் ஓன்று கூடிய ஆயிரக் கணக்கான மக்கள் மதீனா சியபம்பளாகஸ்கொடுவ தேசிய பாடசாலையில் புதிதாக நியமனம் செய்த அதிபரை இடை நிறுத்த வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஆரம்பமாகி பிரதான வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் அமைந்துள்ள குருவிக்கொடுவ சந்தி வரையிலும் சென்று மீளவும் பாடசாலை முன்னால் திரும்பி வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரார்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதீனா பொக்கி~த்தைப் பாதுகாப்போம். புதிய அதிபர் எமக்கு வேண்டாம், ஹைதர் அலி அதிபர் திறமைமிக்கவர். அலி இருக்க எலி எதற்கு. வேண்டாம் வேண்டாம் புதிய அதிபர் வேண்டாம். பிள்ளைகளின் கல்வியில் விளையாடாதே. பொருத்தமற்ற தலைமைத்துவத்தின் கீழ் கற்க மாட்டோம். மதீனா பாடசாலையை கட்டியெழுப்ப ஹைதர் அலி எங்களுக்கு வேண்டும். கல்வித் திணைக்களமே எமக்கு ஆளுமைமிக்க அதிபரே வேண்டும்.

(இக்பால் அலி)