நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வதற்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது பயணத்தின்போது நாளை 9ம் திகதி மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி மற்றும் டெல்லியில் தங்கியிருக்கும் போது, நாமல் தனிப்பட்ட அளவில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்வீகமாக ஆயிரக் கணக்கான ஆண்டாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை உடைத்து விட்டு ராமர் கோவில் அவ்விடத்தில் கட்டப்பட்டு கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.