குருநாகல் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான கொல்லந்தலுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் Rise Up Academy சார்பில் மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் (Exercise Book) மற்றும் பேக் (Bag) ஆகியவை அன்பளிப்பு செய்யப்பட்டன.
Rise Up Academy யின் சகோதரிகள் கலந்துகொண்டு நடத்திய குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதுடன், குறித்த நிகழ்வில் மாணவர்களையும், பெற்றோரையும் தெளிவூட்டும் வகையிலான உரைகளும் Rise Up Academy சகோதரிகளினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு கல்வியே பெரும் செல்வம் என்ற அடிப்படையில் கல்வியின் முன்னேற்றத்திற்காக செய்யப்பட்ட இந்தப் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
VIDEO: