ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எச்.எம்.ஹரீஸ், இஷாக் ரஹ்மான் ஆகியோருடன் கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில் உள்ள தனது அறையில் முக்கிய சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் முக்கியமான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
தனது ஆட்சியின் கீழ் இஸ்லாமியர்களின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் பல விடயங்களை பேச அனைத்துத் தரப்பினரையும் ஒரே நாளில் சந்திக்க ஏற்பாடுகளை செய்யுமாறும் மேற்படி எம்.பிக்களை ஜனாதிபதி ரணில் இந்த சந்திப்பில் கேட்டிருப்பதாக அறியமுடிந்தது.
எதிர்க்கட்சித் தரப்பிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை தனது ஆட்சியில் இணைக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் இந்த சந்திப்பின்போது அறிவித்தாரென மேலும் தெரியவந்தது.
(நமது அரசியல் செய்தியாளர்)