புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தென்னகோனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி 26ஆம் திகதி நியமித்தார்.
1971 ஆம் ஆண்டு பிறந்த தென்னகோன், 1998 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக தனது பொலிஸ் வாழ்க்கையை ஆரம்பித்தார். தென்னகோன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
தென்னகோன் தற்போதைய பதவிக்கு முன்னர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக (SDIG) பணியாற்றினார்.
தென்னகோனின் 25 வருட கால இலங்கை பொலிஸ்துறையில் அவர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்.