Our Feeds


Friday, February 16, 2024

SHAHNI RAMEES

“நான் அனுபவித்து முடித்துவிட்டேன், இரத்து செய்வது நல்லது” - மஹிந்த

 

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தாம் அனுபவித்து முடித்துவிட்டதாகவும் அதனை இல்லாதொழிப்பது நல்ல விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி – அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?

பதில் – அரசியல் சூழ்நிலை நன்றாக உள்ளது

கேள்வி – இப்போது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க விரும்புகிறீர்களா?

பதில் – எந்த பிரச்சினையும் இல்லை

கேள்வி – உங்களுக்கு அதில் ஆட்சேபனைகள் இல்லையா?

பதில் – நான் இப்போது அனுபவித்து முடித்துவிட்டேன். ஆனால் அவர்கள் அதை இரத்து செய்தால் நல்லது. இன்று முழு நாடும் அதை ஒழிக்கச் சொல்லப்படுகிறது.

கேள்வி – இது தேர்தலை ஒத்திவைக்கும் பொறி என்கிறார்கள்.?

பதில் – இருக்கலாம். ரணிலை நாங்கள் நன்கு அறிவோம்.

கேள்வி – ஜனாதிபதி தேர்தல் குறித்து என்ன நிலவரம்?

பதில் – எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம். ஜனாதிபதி தேர்தலில் கூட எமது வேட்பாளர் வெற்றி பெறுவார். பொதுத் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி – அநுரவின் இந்தியப் பயணம் பற்றி?

பதில் – நல்லது. இந்தியா நமது அண்டை நாடு. அவர்களும் நட்புறவுடன் இருக்க வேண்டும். தாமதமாகியாவது புரிந்தது பெரிய விடயம்..

கேள்வி – ஜே.வி.பி அலை பற்றி என்ன?

பதில் – ஜே.வி.பி அலையாக உருவெடுத்து இப்போது உடைந்து விட்டது..


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »