Our Feeds


Wednesday, February 28, 2024

SHAHNI RAMEES

பஸ்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

 


இ.போ.ச. பஸ்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள்,

வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


நேற்று (27) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள் அறிவித்தலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »