2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு
ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.குறித்த தூதுக்குழுவினர் ஈரான் விமான சேவைகளுக்கு சொந்தமான ஈரான் 05 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.