Our Feeds


Wednesday, February 14, 2024

News Editor

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம்


 ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம்  http://(https://www.presidentsfund.gov.lk ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதுப்பித்த தகவல்களை மூன்று மொழிகளிலும் பெறுவதுடன், மருத்துவ உதவி பெறுவதற்கான விண்ணப்பத்தையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத்குமார், ஜனாதிபதி நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கயான் மொரலியகே, ஜனாதிபதி நிதியத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.பொதேஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »