தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை ரயில் நிலையத்திற்கு
அருகில் ரயிலில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவன் கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொல்லிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், தம்பலகமுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.