மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு
அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.