முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவை என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கமைய, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்படுமெனவும் இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.