நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனைகளின் அடிப்படையில், நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் உள்ள இடங்கள் , வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதானமாக நுவரெலியாவிலுள்ள 26 பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இன்று (02) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலாக எட்டு குழுக்கள் அடங்கிய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மாணவர்களுக்கிடையே அதிகரித்துவரும் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடன் பாடசாலை மாணவர்களையும் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் போதை பொருள் வியாபாரிகள் மற்றும் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல் அறிந்து வைத்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி கோரியுள்ளார்.
-ஆர்.எப்.எம்.சுஹெல்,செ.திவாகரன்-