Our Feeds


Saturday, February 24, 2024

SHAHNI RAMEES

முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டம் இரத்து...!

 



முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை

இரத்து செய்ய இருப்பதாக இந்தியா – அசாம் அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக உள்ளன. இதற்குப் பதிலாக, அனைத்து மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »