இந்திய மின் சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் தலைமையிலான குழுவினர் மூன்று நாள் விஜயமாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை அவரது அமைச்சில் நேற்று சந்தித்தனர்.
இதன்போது, இந்தியாவுடன் திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டமைப்பை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம், 130 மெகாவாட் சம்பூர் மின்னுற்பத்தி செயற்றிட்டம், யாழ். மாவட்டத்தின் மூன்று தீவுகளில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உத்தேச மின்மயமாக்கல் செயற்றிட்டங்கள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.