இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இன்று காலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர்.
''இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிபேசினோம் . மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசப்பட்டது.'' என்று இந்திய அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.