புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமைக்கு ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.