அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத்
தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.அண்மையில் இந்தியாவில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என பிரகடனப்படுத்தியமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்பதோடு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தையும் மீறியுள்ளது.
அந்த அறிக்கையின் மூலம் இலங்கையின் இறையாண்மையை மீறும் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் கலாநிதி வசந்த பண்டார குறிப்பிடுகின்றார்.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலாநிதி வசந்த பண்டார மேலும் குறிப்பிடுகின்றார்.