சிறுமி கொலை வழக்கு; நீதி கோரி அமைதி வழி போராட்டம்
மன்னார் , ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டடிருந்தது. இதன்போது விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.