நாட்டின் முன்னணி போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் அங்கம் வகிக்கும் குடு சாலிந்துவின் பிரதான கையாள் டுபாயில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பியும் ஹஸ்திகா அல்லது பியூமா என அழைக்கப்படும் இந்த சந்தேக நபர் குடு சலிந்துவின் பிரதான கையாள் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் பியூமா இந்நாட்டில் பல போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.