நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் மின்சார பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார அமைச்சின் பொறியியளாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார் .
இதன்படி ஒரு வாரத்துக்கான மின்சார தேவைப்பாடு மணிக்கு 46 ஜிகாவோட்ஸ்ஸால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் மணிக்கு 38 ஜிகாவோட்ஸ் மின்சார தேவைப்பாடு காணபட்டது.
வறட்சியான காலப்பகுதியினால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்விசிறி மற்றும் குளிரூட்டி பாவனை அதிகரித்ததினாலேயே மின்பாவனை அதிகரிப்புக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வறட்சியான காலநிலை வருகின்ற மே ஜூன் வரை நீடிக்கும் எனவும் இக்காலப்பகுதியில் நீர்மின் உற்பத்தி அளவு நூற்றுக்கு 23 வீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.