அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா நாளை(18) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொழும்பு துறைமுக நகரத்துக்கும் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது