Our Feeds


Tuesday, February 13, 2024

News Editor

வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும் பயனர்களுக்கு மெசேஜிங் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயனர்களை ஏமாற்றும் தகவல்கள் அடங்கிய ஸ்பேம் மெசேஜ்கள் வாட்ஸ்அப்-இல் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், பயனர்கள் இவற்றுக்கு லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் மற்றும்ஓர் முயற்சியாக புதிய அம்சம் அமைந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். இதற்கு ஸ்பேம் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து பிறகு திரையில் தெரியும் பல்வேறு ஆப்ஷன்களில் பிளாக் செய்யக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வசதி தவிர பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- பிரைவசி -- பிளாக்டு கான்டாக்ட்ஸ் -- ஆட் போன்ற ஆப்ஷன்களுக்கு சென்று பிளாக் செய்ய வேண்டிய கான்டாக்ட்-ஐ சேர்க்க முடியும்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »