Our Feeds


Tuesday, February 27, 2024

ShortNews Admin

BREAKING: காஸா அப்பாவி குழந்தைகளுக்காக ஜனாதிபதி ரனிலின் அருமையான அதிரடி திட்டம்!



காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப்  பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »