Our Feeds


Friday, February 16, 2024

SHAHNI RAMEES

புதிய செயற்கைக்கோளை ஏவும் இஸ்ரோ....!

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ரொக்கெட்டில் பொருத்தி நாளை (17) மாலை 5.30 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது.



இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ரொக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையிவுள்ளது. இந்த நிலையில், ரொக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (15) பகல் 2.05 மணிக்கு தொடங்கியது.



வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ரொக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ரொக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.



ரொக்கெட்டின் 2ஆவது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய இயந்திரம், 3ஆவது நிலையில் 15 டன் திரவ ஒட்சிசன் மற்றும் திரவ ஐதரசன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ரொக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »